Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Login | Pending Members |Home | Site Map | குலாலர் மணமாலை | Logout
DOWNLOAD Nala Waariyam form தமிழ் நாடு குலாலர் சமுதாய தொழிலாளர் முன்னேற்ற சங்கம்
பதிவு எண். 3358/2010 23 சேட் காலனி, 2வது தெரு எழும்பூர், சென்னை 60008
குலாலர் கே.ஜெயராமன். மாநில தலைவர்.
இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக குலாலர்களுக்கு, தமிழக முதல்வர் மாண்பு மிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, தமிழக அரசால் கடந்த வருடங்களில் (2013-14), (2014-15) மழைக்கால நிவாரணமாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.4,000/- வீதம் 13,118 பேர்களுக்கு வழங்கப்பட்டது குறித்து தமிழ் நாடு குலாலர் சமுதாய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தங்களுடைய கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின் ;றது.

மேலும் 2016 தேர்தல் வாக்குறுதிகளில், மண்பாண்டங்கள் தயாரிக்க மண்பாண்ட தொழிலாளர்களுக்கு “சீலா வீல்“ மின்சக்கரமும், ஏரிகளில் களிமண் எடுக்க சிறப்பு சலுகையும், மழைக்கால நிவாரணமாக ரூ,4,000/- லிருந்து உயர்த்தி, தலா ரூ.5,000/- வீதமும் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.

தமிழக அரசு விரைவில் நல வாரியங்களை அமைக்க இருக்கின்றது.
இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பதற்கு முன்னால் , நாம் தகுதியுள்ள மணபாண்ட தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்த்து குறைந்த பட்சம் ஐப்பதாயிரம் பேர்களுக்காவது, மழைக்கால நிவாரணம் பெற்று தரசெய்யவேண்டும்.
மண்பாண்டம் செய்கிற, அகல்விளக்கு செய்கிற,சொருகு ஒடுகள் செய்கின்ற, டெர்ரககோட்டா பொம்மைகள் செய்கிற, களீமண் பொம்மைகள் செய்கிற ஆண்,பெண் இருபாலரும் , 18 வயதிற்கு மேல் 58 வயதிற்குள் உள்ள அனைவரும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம். அதற்குண்டான மழைக்கால நிவாரணமாக ரூ.5,000/- ம் பெறலாம்.
58 வயதிற்குள்ளாவது நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தால் 58, 59 ஆகிய இரு வருடங்களூக்கு ஆண்டொன்றுக்கு ரூ,5,000/- வீதம் மழைக்கால நிவாரணமாகவும், 60 வயதிற்கு மேல் ஆயுள் வரைக்கும் மாதாமாதம் ரூ.1,000/- பென்ஷன் (அதாவது வருடத்திற்கு ரூ12,000/= ) ஆகவும்வழங்கப்படும்


தமிழகத்தில் கிட்டத்தட்ட 40 இலட்சம் குலாலர்கள் உள்ளனர். போதுமான கல்வியறிவும் மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், காதி போர்டு, பொது சங்கங்கள் , மண்பாண்ட நலவாரியம் போன்ற எது ஒன்றிலும் உறுப்பினராக பதிவு செய்யாத காரணத்தினாலும், தமிழக அரசின் பொன்னான திட்டங்கள் அடிமட்டத்திலுள்ள அவர்களை சென்றடையவில்லை.

அவர்கள் அனைவரையும் வெளிக்கொணர்ந்து, நம் அனைவரின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவது நம் அனைவரின் கடமையுமாகும். அதை நீங்கள் மிக மிக எளிதாக செய்யலாம். நீங்கள் தனிமனிதராக நின்றே இந்த அமைதி புரட்சியை செய்யலாம்.. இதற்கு பெருமளவில் பணமோ, பொருளோ, நேரமோ செலவிடத்தேவையில்லை. மனமிருந்தால் மார்கமுண்டு.
மண்பாண்ட தொழிலாளர்கள் நேரிடையாக விண்ணப்பிக்க முடியாது. சங்கங்களின் வழியாக விண்ணப்பிப்பது சாலச்சிறந்தது.
முதல் கட்டம்: குலாலர்கள் அனைவரையும் அடையாளம் காட்டுவது.

2ம் கட்டம் : அனைவருக்கும் எஸ்.எம்.எஸ், ஈ-மெயில், வாட்ஸ் அப் , பேஸ்புக் மூலமாக விண்ணப்பிக்க அழைப்பது.
3ம் கட்டம்: விண்ணப்பம் தேவைப்படுவோருக்கு விண்ணப்பம் அஞ்சலில் அனுப்பபடும். மேலும் அந்தந்த ஊரில் தமிழ் நாடு குலாலர் சமுதாய தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மூலமாக தொழிலாளர் நல அலுவலரை சந்தித்து விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் நடைபெறும்.

நீங்கள் எந்த சங்கத்தின் மூலமாக மனு செய்திருந்தாலும் அந்த விவரங்களை திரட்டி , தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தற்சமயம் மாவட்டம் தோறுமான நிர்வாகிகள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில ;்லை. உங்கள் ஊரில் நிர்வாகிகள் யார், யார், எங்கே? என்று தேடிக்கொண்டிராமல், நீங்கள் அனைவருமே நிர்வாகிகளாக பாவித்து உங்கள் ஆளுமைப்பண்பை வளர்த்துக்கொண்டு, உங்கள் உறவினர்கள் அனைவரின் விவரத்தை சேகரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ;.. .

முதல் கட்டமாக நீங்கள் செய்யவேண்டியது,
1. உங்கள் செல்போனில் பதிவாகியுள்ள உங்கள் உறவினர்கள் அனைவரின் பெயர், ஊர், செல்போன் எண் பட்டியலை தெளிவாக தயாரியுங்கள்
2. உங்கள் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடக்க இருப்பதாக பாவித்து அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் அழைக்கப்போகும் உங்கள் உறவினர்கள் அனைவரின் பெயர், ஊர், செல்போன் எண் பட்டியலை தெளிவாக தயாரியுங்கள்.
3. அந்தப்பட்டியலை ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்து, பிரதியை எங்களுக்கு கடிதம் மூலமாக மேலே உள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது www.kulalars.com நேரடியாக பதிவுசெய்யுங்கள், அல்லது
in excel file to deshankar2000@yahoo.com
அனுப்பி வையுங்கள்.
4. இன்னொரு காப்பியை காலண்டர் போல் உங்கள் வீட்டில் மற்றவர் பார்வைக்கு படும் படி மாட்டிவையுங்கள். இன்னொரு காப்பியை காலண்டர் போல் மாட்டி வைப்பவர்கள் குடும்பம் விரைவில் முன்னேறறிக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயம் சிறிதளவுமில்லை,
நன்றி
தங்களின் மேலான ஒத்துழைப்பை நாடும்
குலாலர் கே.ஜெயராமன். மாநில தலைவர்.